தாய்வானின்  பதற்றத்தில்  1.8 பில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்கள் கொள்வனவு 

சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது.

இதனை அமெரிக்க வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தாய்வானுக்கு வான்வழி- தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1.8 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தாய்வானுக்கு ஏஜிஎம்-84எச், எஸ்எல்ஏஎம்-ஈஆர் கப்பல் ஏவுகணைகள் ஆறு, எம்.எஸ்-110 விமான உளவு கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளுடன் 11 எம்142 மொபைல் லைட் ரொக்கெட் ஆகியவற்றை வழங்குகிறது.

எஸ்எல்ஏஎம்-ஈஆர் ஏவுகணைகள் தாய்வானின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு உதவும், ஏனெனில் இது அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு, தரையில் அல்லது கடல் மேற்பரப்பில் நகரும் மற்றும் நிலையான இலக்குகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தும் திறன்களை கொண்டது.

இதுகுறித்து தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், ‘இந்த ஆயுத விற்பனை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்றும் தாய்வான் நீரிணையின் மூலோபாய நிலைக்கு அமெரிக்கா மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது, மேலும் நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் நம் நாட்டுக்கு தீவிரமாக உதவுகிறது’ என தெரிவித்துள்ளது.

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர்.

எந்த நேரத்திலும் சீனா தாய்வான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிற நிலையில், இந்த ஆயுத கொள்வனவு இடம்பெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்