
குடும்பத்துடன் நீராடச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்துக்கு அருகில் மாணவனின் தாய் உள்ளிட்ட குழுவினர் நேற்று (14) மாலை நீராடச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மாணவனை பொலிசார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடி வருகின்றனர்.
மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.