தாக்குதல்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்தில் மண்வெட்டி ஒன்றினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மஹஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மகனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் மஹஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை, பந்தகிரிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 05 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்