தவிக்கும் இத்தாலி! அவசரமாக விரைந்த பலமான கியூபா மருத்துவக் குழு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.

வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் சுகாதார சேவைகளுக்கு உதவி வழங்க கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 52 பேர் கொண்ட பலமான கியூபா மருத்துவக் குழு சமீபத்தில் இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இத்தாலிக்கு சென்ற குறித்த வைத்திய குழுவுக்கு இத்தாலியில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரையில் அங்கு 5 ஆயிரத்து 476 பேர் பலியாகியுள்ளதோடு 59 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்