தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ். பொலிஸார்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் வழியில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து  பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்த ராஜலட்சுமி சௌந்தர்ராஜன் (வயது 62)  என்பவர் தனது  96,000  ரூபாய் பணத் தொகையை தவறவிட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த யாழ். மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும்  பேருந்தை கொக்குவில் பகுதியில் வழிமறித்து நடத்துனரின் உதவியுடன் , பேருந்தை  சோதனையிட்டனர்.

பணத்தினை காணாத நிலையில் , பயணிகளை சோதனையிட போவதாக கூறி , ஒரு சில பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி சோதனையிட்ட போது , பேருந்தினுள் பணம் கிடப்பதாக பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே 89,000 பணத்தொகை ஆசனத்தின் கீழே இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குறித்த தாய் 7,000 ரூபாய் பணம் மட்டும்தானே காணவில்லை  என தெரிவித்து பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.  பொதுமக்களால் இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்