“தளபதி 67“ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் மத்யூ தோமஸ்

இருபது வயது இளம் நடிகரான மத்யூ தோமஸ் “தளபதி 67“ படத்தில் விஜய்யுடன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் மத்யூ தோமஸ் இளைய தளபதி விஜய் சினிமாவில் அறிமுகமான போது அவரது தோற்றம் எப்படி இருந்ததோ அதேபோல் காணப்படுகிறார் மத்யூ தோமஸ். அதனால், விஜய்யின் இளம் வயது கேரக்டர் அல்லது அவரது தம்பி ரோலில் மத்யூ தோமஸ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் லோகேஷ் கனராஜ் சொன்னபடி அபிஸியல் அப்டேட் எல்லாமே டிசம்பரில் தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்