தளபதி 65 இயக்குனரை அறிவிக்கும் விஜய்.. செம மாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று தகவல்கள் வெளிவந்திருந்தது.

கூடிய விரைவில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற உள்ளது. ஆம் இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

மேலும் இன்று இப்படத்தின் second சிங்கிள் வெளிவரவுள்ளது என்று நேற்று மாலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு பக்கம் இப்படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில விஷயங்களால் இப்படத்தை இவர் இயக்கவில்லை என்று தற்போது தெரிவந்துள்ளது.

இதனால், இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்க போகிறாரா என்ற கேள்வியும் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

ஆனால் தற்போது நடக்கவிற்கும் மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய் தனது அடுத்த படத்தின், அதாவது தனது 65ஆம் படத்தின் இயக்குனர் யார் என்பதனை கூற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அது யார் என்பதனை மாஸ்டர் பட ஆடியோ லான்ச் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முகநூலில் நாம்