தளபதி விஜய்யை பார்த்து நான் பொறாமை பட்டுள்ளேன், சூர்யா கூறிய சூப்பர் தகவல்!

தமிழ் சினிமா தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர்கள் சூர்யா, விஜய். இருவருமே தங்கள் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் ரஜினிக்கு நிகராக வளர்ந்து சூர்யா அஞ்சான் படத்திற்கு பிறகு வரிசையாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தார்.

அப்படியிருக்கையில் சூர்யா பீக்கில் இருக்கும் போது விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதில், விஜய்யை பார்த்து நான் பல முறை பொறாமை பட்டுள்ளேன், என்ன மனுஷன் இவர், இப்படி நடனமாடுகிறார்.

அவர் போல் எப்போது நடனமாடுவது என பல இடங்களில் வியந்துள்ளேன்’ என சூர்யா பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்