தளபதி விஜய்யின் சச்சின் 2.. படத்தின் இயக்குனர் கூறிய தகவல்..

ஜான் என்பவரின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் சச்சின்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெனிலியா, ரகுவரன், வடிவேலு, சந்தனம், பிபாஷா பாசு, சந்தனம், தாடி பாலாஜி உள்ளியார் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை தான்.

இப்படம் மிக சிறந்த படமாக இருந்தாலும் சந்திரமுகி படத்துடன் மோதியதால் இப்படம் தோல்வியடைந்தது.

இருந்தாலும் கூட இப்படத்தை தற்போது பார்த்தாலும் சகளிக்காத ஒன்று தான்

இந்நிலையில் சமீபத்தில் சச்சின் படத்தின் இயக்குனர் ஜான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை அதில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் சச்சின் படத்தின் பார்ட்-2 உருவாகும் வாய்ப்பு குறித்து பேசினார், : ‘ கண்டிப்பாக அப்படி ஒரு படத்தில் விஜய்யை பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன். சச்சின் 2 படத்தை நான் இயக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை இயக்கி, வேறு யாரொருவர் இயக்கினால் கூட எனக்கு சம்மதம் தான். மீண்டும் அவரை கூலான அந்த கதாபாத்திரத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன். அது நடந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் ‘ என இயக்குனர் ஜான் கூறினார்.

முகநூலில் நாம்