தலிபான்களின் நகைப்புரிக்குரிய செயல் – சீனா கண்டனம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானத்தில் இறக்கையின் விளிம்பில் கயிற்றை கட்டி ஊஞ்சல் விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

துப்பாக்கி முனையில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்த தலிபான்கள் நகைப்புக்குரிய செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.


கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஷேர்பெர்கானில் பேகாவில் உள்ள போக்தி பொழுதுபோக்கு பூங்காவுக்குள் சென்றனர். அங்கு குழந்தைகள் விளையாடும் டேஷிங் கார்களை விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் ரங்க ராட்டினத்திலும் உள்ள குதிரை மீது அமர்ந்து சுற்றினர். இதையடுத்து அவர் ஜம்பிங் டிராம்புகளிலும் ஏறி நின்று குதித்து விளையாடினர். இதையடுத்து ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்ற அவர்கள் துள்ளி குதித்து விளையாடினர். ஆட்சியை பிடித்துவிட்டோம்இ அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பற்றி யோசிக்காமல் இவர்கள் விளையாடியது அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.

இவ்வாறு ஆசையாக விளையாடிய பூங்காவையே கடைசியில் நெருப்பை வைத்து எரித்துவிட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்ற விமானங்களைத்தான் இவர்கள் விளையாட்டு பொருட்களாக மாற்றி இதன் இறக்கையின் முனையில் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து சீனா ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா விட்டுச் சென்ற விமானங்களை தலிபான்கள் விளையாட்டு பொருளாக மாற்றி கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கும் அமையும் புதிய அரசுக்கு சீனா ஒத்துழைப்பு கொடுப்பதாக அறிவித்தது. இதையடுத்து 31 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் நிதியுதவியாக வழங்குவதாக அறிவித்தது. அது போல் தலிபான்களும் சீனா எங்களுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றனர். தலிபான்கள் ஆட்சியில் பிரதமர்இ அமைச்சரவை பட்டியல் வெளியான அடுத்த நாளே சீனா கண்டனம் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்