தற்போதைய நடைமுறையை மாற்ற வேண்டும்!

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய நடைமுறையை மாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பெண்கள்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும்.

சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு விசேட கடன் முறையை அமைப்பது அவசியமாகும்.வங்கிகளில் கடன் வழங்கும் முறை மாற்றமடைய வேண்டும்.

வங்கிகளில் கடன் பெற்று ஏதாவது தொழிற்சாலையை ஆரம்பிக்க கூடிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும்.மத்திய வங்கியின் ஆலோசனை பெற்று இலகு முறை ஒன்றை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறான அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றினை தாம் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்