தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்

காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இளைஞனும், யுவதியும் பொது இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாத்தளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதியும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞனுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்