தற்காலிக வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவனின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் மரணம்

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை வீழ்ந்துள்ளது   இதன் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது..

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.. தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக்கொண்டிருந்துள்ளான் இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து்ச்  செல்லப்பட்டுள்ளான். வை்தியசாலையில் சிகி்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 
இச் சம்பவத்தில் 8 வயதான நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் வெள்ள நீர் தேங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 கரைச்சி பிரதேச சபையிடம் இப் பகுதிக்கான வடிகாணமைப்பு வசதியினை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று ஒரு சிறுவனின் உயிர் பிரிந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதேவேளை கடந்த அரசின் காலத்தில்  வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படாமையினாலேயே நிரந்தர வீட்டுக்குள் செல்ல முடியாது போயுள்ளதாகவும், அவர்களிற்கான நிரந்தர வீடு அமைப்பதற்கான மிகுதி பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்