தர்மபுரம் நெசவு தொழிற்சாலைக்கு கிளிநொச்சி அரச அதிபர் விஜயம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம்
பகுதியில் வடமாகாண தொழில்துறை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற
இயங்கிவருகின்ற நெசவு தொழிற்சாலைக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி  றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இன்று விஜயமொன்றை
மேற்கொண்டிருந்தார்.

நெசவு தொழிற்சாலையில்  உள்ள குறைகளை கேட்டறிந்த உடன் உள்ளூர் உற்பத்திகளை
ஊக்குவிக்கும் நோக்கில் நெசவு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற
பெட்ஷீட் சாரி உள்ளிட்ட உற்பத்திகள் தரமான முறையில் இடம்பெறுகின்றனவா?
அவற்றுக்கான சந்தை வாய்ப்புக்கள் நிலைமைகள் தொடர்பிலும்  மாவட்ட அரச
அதிபர் கவனம் செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்