தர்பார் இரண்டு இடங்களில் தமிழகத்தில் ரிலிஸாகவில்லை, ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக இன்று வெளிவந்துள்ளது. இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களை திருப்திப்படுத்தியதா என்று தெரியவில்லை, ஒரு சிலர் புகழ்கின்றனர்.

மற்றும் சிலர் கலவையான விமர்சனங்களை தருகின்றனர், எது எப்படியிருந்தால் என்ன ரஜினியை பார்த்தால் போதும் என்பது ஒரு ரகம்.

ரசிகர்கள் இப்படியிருக்க தமிழகத்தில் திண்டுக்கல், தேனி பகுதிகளில் தர்பார் படம் ரிலிஸே ஆகவில்லையாம், இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திண்டுக்கல்லில் படத்தை ரிலீஸ் செய்யாததால் ரசிகர்கள் பேனர்களை எல்லாம் கிழித்துள்ளனர். தற்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்