
தரவரிசை பட்டியலில் இஷான் கிஷன் 37-வது இடத்தை பிடித்துள்ளார் துபாய், ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் 117 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.