தரம் 8 சித்தியடைந்த இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

தரம் 8 சித்தி எய்திய 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது

குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியைக்கொண்ட 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி பணிக்குழு ஒன்றை அரச திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த பிரிந்துரைக்கு 2019.12.10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு அமைவாக இந்த திணைக்களத்தின் கீழ் ‘அபிவிருத்தி பணி உதவி சேவை’ என்ற பெயரில் சேவை ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்த சேவைக்காக அரசாங்க பாடசாலைகளில் தரம் 8 சித்தி எய்திய 100,000 பேரை இணைத்துக்கொள்வதற்காகவும் மகாவலி, விவசாய நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முகநூலில் நாம்