தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல்

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக உயர் நிதிமன்றில் அடிப்படை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

அரசியலமைப்பின் 99 ஏ பிரிவின் படி அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரையே தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யமுடியும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பேரேரா பெயரிடப்பட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரனானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்