தமிழ் மக்களை புறக்கணிக்க மாட்டோம் – அரசாங்கம்

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களில் இருந்தும் தமிழ்
மக்களை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான
விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தில் நிலவும்
போதைப்பொருள் பிரச்சினை குறித்து ஆராய வடக்கு ஆளுநர் தலைமையில் செலயலணி
அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று நாடளாவிய ரீதியிலும் அமைக்கப்படும்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளை
கொண்டுள்ள இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்காக நடமாடும்
சேவைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் அதனை
இரட்டிப்பாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர்
விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்