தமிழர் விடுதலைக் கூட்டணி வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை

காலம் கடந்தாலும் மக்கள் வேண்டுவது சமநீதியே.
2004 இல் ஜனநாயகம் தடம் புரண்டது எப்படி?

நாட்டின் சட்டதிட்டங்கள் முறைப்படி அமுல்படுத்தப்படவில்லை என நான் எவரையும் குற்றம் சாட்ட வரவில்லை. அமைச்சர் ரிசார்ட் பதுர்தீன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செய்த குற்றங்களில் ஒன்று அரச பணத்தை செலவு செய்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ் வண்டிகளை உபயோகித்து 12000 இடம் பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு அனுப்பி வைத்தமையாகும். சுhதாரண காலத்தில் இச்செயல் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டு இருக்க வேண்டிய செயலாகுமே தவிர குற்றம் சாட்டப்பட வேண்டிய ஒரு குற்றமல்ல. உரிய கட்டணத்தை அறவிட்டிருந்தாலும் அப்பணம் திரும்ப கொடுக்க வேண்டி வந்திருக்கும். ஏனெனில் அரசின் கடமையை அவர் தானே நிறை வேற்றி வைத்தமைக்காக.


நான் அமைச்சர் அவர்களுக்கு வக்காளத்து வாங்கவில்லை. அனால் இது போன்றல்லாமல் மிகப்பாரதூரமான அளவு குற்றங்களை செய்த திரு.இரா.சம்பந்தன், திரு. மாவை சேனாதிராஜா ஆகியோர் 2004 ஆம் ஆண்டு பொது தேர்தலில் 22பாராளுமன்ற ஸ்தானத்தை எவ்வாறு பிடித்தார்கள்? என்பது ஒரு புதிரல்ல, சட்டவிரோதமான செயலாகும். கடூழிய தண்டனையை பல ஆண்டுகளாக அனுபவித்திருக்க வேண்டியவர்கள் மிக ஜாலியாக வலம் வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் பலகாலம் பதவியை அனுபவித்து வரும் இச்சந்தர்ப்பத்தில்இ நாட்டில் பல இன மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் உள்ளத்தில் இன்றும் அலை மோதிக்கொண்டிருக்கும் கேள்விஇ பலதரப்பட்ட குற்றம் செய்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 22 பேர் எப்படி பாராளுமன்ற உறுப்பினராகினர்? என்பதே. ஆறு ஆண்டுகள் அனுபவித்து விட்டு சிலர் இன்றும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். ஓர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு ஆறு ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போதே கொலைகள் குண்டுத்தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 1500 க்கு மேற்பட்ட தொகையினர் படுகாய முற்றனர். 


எல்லாவற்றுக்கும் மேலாக அன்று வன்னியில் தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பலக்கோடி பெறுமதியான சொத்துக்களும் இழக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் சகல இனத்தவருமே. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் அவர்களே தேசிய தலைவர்கள் என்றும் கூறி பாராளுமன்றம் சென்ற 22 பேரும் 6 ஆண்டுகள் பதவிவகித்தும் ஒருவரேனும் ஒரு தடவையேனும் இது தொடர்பாக மூச்சுவிடவில்லை. இவற்றுக்கு காரணம் யார் என்பது அரசுக்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ தெரியாமலிருக்ககாரணமில்லை. உரியவர்கள் உரிய நடவடிக்கையை காலம் கடந்தாலும் எடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தி 1.11.2018 இல் இலங்கையில் ஜனநாயகம் ஏன் தடம் புரண்டது என்று கேள்வியெழுப்பி வெளியிட்ட அறிக்கை இத்துடன் இணைக்கப்படுட்டுள்ளது.

வீ.ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்