தமிழர்கள் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளக்கூடாது!

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியை தமிழர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்மக்களையும் ஒரு அரசியல் சதிவலைக்குள் கொண்டுசென்று நெருக்குகின்ற நிலமையினை உருவாக்கும் என பா.உ வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

சபாநாயகர் சர்வகட்சி கூட்டத்திலே ஜனாதிபதி பதவி  விலகுவதாகவும், புதிய  பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் பல்வேறு  கருத்துக்களை  நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார்.

13 ஆம்  திகதி  ஜனாதிபதி பதவி விலகுவார் என  ஒரு  கருத்து  இருக்கிறது அதில்  எவ்வளவு  உண்மை  இருக்கிறது  என்று தெரியவில்லை. 

ஒட்டுமொத்த நாட்டு மக்களின்  உணர்வுகளை  புரிந்து  கொண்டு ஏற்றுக்கொண்டு  ஜனாதிபதி உடன் பதவி  விலகவேண்டும். அதே போலத்தான் பிரதமரையும் இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.

எங்கள் கட்சியினை பொறுத்தமட்டில் இருவரும் உடனடியாக பதவிவிலகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அந்த இடத்திற்கு யார் வரவேண்டும் என்பதில் எங்களுக்கும் எங்கள் கட்சிகளுக்கும் மக்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம். யார் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதில் இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை.

எங்களை பொறுத்தமட்டில் இப்பொழுது இருக்கின்ற நிலையில் எங்கள் தமிழ்மக்களின் இனபிரச்சினைக்கு நிதந்தர தீர்வு எற்படுத்தப்பட்டு அது அமுல்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற சூழ்நிலையினை அவர்கள் உருவாக்கிவிட்டால் எந்த பதவிகளையும் எடுக்க நாங்கள் தயாராகி இருக்கின்றோம்.

இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்மக்களுக்கு ஒரு நிதந்தர தீர்வினை கொடுப்பதற்கான சந்தர்ப்பம். 

அடுத்த தெரிவுகளுக்குள் நாங்கள் பங்காளராக இருக்கலாம் ஆனால் யார் என்பதை தமிழ்மக்கள் சார்பில் எல்லோரும் இணைந்து தீர்மானித்து, உயர் பதவிகளில் வரவேண்டியது யார் என்பதை நாங்களும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக நாங்கள் பாராளுமன்றத்தில் நிச்சயமாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்