
தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான
நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் தொடர்பில் மக்கள்
பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள
நிலையில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்த வடக்கிழக்கில் சமஷ்டி
அடிப்படையிலான இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களை
வெளிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து கருத்துவெளியிடும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த
அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அழைப்பு
விடுத்துள்ளர்.
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த் தரப்புக்கள பங்கேற்பது மிகவும்
முக்கிமானது. ஆனால், பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன்னதாக,
இணைந்த வட,கிழக்கு உட்பட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற விடயதத்தினை
அத்தரப்பு பிரதானமாக முன்வைத்துள்ளது.
இது, பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண சமிக்ஞை வெளிப்பாடுகளை பின்னயைச்
செய்வதற்கான முயற்சியாகும்.
ஆகவே,தமிழ்த் தரப்பு இவ்வாறு பகிரங்கமான நிபந்தனைகளை விடுத்து,
பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று,அதன் பின்னர் சில விடயங்களை முன்வைக்க
முடியும் என்றார்.