
75வருடகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இந்த ஆண்டு
ஏற்படுத்துவதற்காக முயன்று வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களது
அரசியல் போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட
அனைத்து தலைவர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இலங்கை
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில்
வியாழக்கிழமை (12) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
தலைநிமிர்ந்து நிற்பதற்காக நாம் ஆயுதங்களை ஏந்திக்கூடப்போராடினோம்.
எனினும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எவ்விதமான
விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள்
மற்றும் சாத்வீகப்போராட்டங்கள் ஊடாக அதனை அடைவோம் என்ற உறுதியோடு
இருக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் எங்களுடைய அரசியல் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க
வேண்மென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணனிடத்திலும், ஏனைய
நாடுகளின் தலைவர்களிடத்திலும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
என்றார்.