
தமிழக அரசை போன்று தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியல் கைதிகளை
விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்கு செவிமடுத்தும், அரசியல் கைதிகளின்
நன்நடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட
அரசு துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்
தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டவர்கள் என
குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அவர்களின்
நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்று பாராட்டுகின்றது.
இவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்ட தமிழக அரசு உட்பட அனைத்து
தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது. இந்த வழக்கின் தீர்ப்பை
முன் மாதிரியாக கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து
வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு
துரித நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்