தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவி மரணம் மற்றும் வெளியான அதிரவைக்கும் ஆதாரம்!

 தமிழகத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

தமிழகத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  பாடசாலை மாணவி மரணம்! | Death Of A Schoolgirl Has Caused Stir Tamil Nadu

குறித்த மாணவி கடந்த 13ம் திகதி, பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் , மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  பாடசாலை மாணவி மரணம்! | Death Of A Schoolgirl Has Caused Stir Tamil Nadu

இதனையடுத்து மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டு போராட்டம் முன்னெடுக்கபப்ட்ட நிலையில் அ து வன்முறையாக மாறியது.

பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன் பொலிஸ் வாகனமும் தீவைக்கப்பட்டதுடன் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

தமிழகத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  பாடசாலை மாணவி மரணம்! | Death Of A Schoolgirl Has Caused Stir Tamil Nadu

இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இரு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் , பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தமிழகத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வெளியான அதிரவைக்கும் ஆதாரம்!

தமிழகத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த கள்ளக்குறிச்சி மாணவி  ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் கடலூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் 17 வயது ஸ்ரீமதி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 13ம் திகதி மாணவி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் . மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்ல், அது கலவரமாக வெடித்தது.

பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், எனினும் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ரீமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி எழுதியிருந்ததுடன், அம்மா, அப்பா, சந்தோஷ், துர்கா உள்ளிட்ட சில பெயர்களை எழுதியதுடன் என்னை மன்னித்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மாணவியின் மரணம் தமிழத்தையே உலுக்கியுள்ள நிலையில் இந்த கடிதம் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்