தமிழகத்தில் இதுவரை 81 இலட்சம் கொரோனா பரிசோதனைகள்

கொரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 81 இலட்சத்து 41,534 பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 81 இலட்சத்து 41,534 பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை அதிகரித்ததன் காரணமாகவே நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள் வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. நோய்ப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நாள்தோறும் சராசரியாக 90 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 97,087 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் தொடா்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 90 இலட்சம் பிசிஆா் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:

தமிழகத்தில் இதுவரை 6 இலட்சத்து 46,128 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும், 5,185 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,288 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 397 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 91 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 5,357 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 91,811 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 44,197 ஆக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 68 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 34 போ் அரசு மருத்துவமனைகளிலும், 34 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,120 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்