
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 9 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் நான்கரை கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 05 பேர் தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டபத்திற்கு அருகே நடுக்கடலில் நாட்டுப் படகொன்றை சோதனைக்குட்படுத்திய போதே தங்கத்துடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்களாவர்.
இலங்கை மீனவர்கள் உதவியுடன் இவர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.