தப்பிச்சென்றவர்களில் 599 பேர் சரண்

பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 599 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

மேலும் 126 கைதிகளைத் தேடும் பணிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

தப்பிச்சென்று சரணடைந்தவர்களில் 261 ​​கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெலிகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கைதிகளிடையே அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, நேற்று காலை அங்கிருந்து கைதிகள் பலர் தப்பிச்சென்றனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்