தன்னை தீண்டிய பாம்பை கடித்துக் கொன்ற 2 வயது குழந்தை

துருக்கியில் தன்னை தீண்டிய  பாம்பை 2 வயது குழந்தை கோபத்தில் அதை திரும்ப கடித்து கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துருக்கியின் கந்தர் கிராமத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் வந்து பார்த்தபோது இரண்டு வயது சிறுமியின் வாயில் அரை மீட்டர் நீளமுள்ள பாம்பு ஒன்று கவ்வி இருந்ததைக் கண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்துள்ளது. 

இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள குழந்தைகள் நல வைத்தியசாலைக்குச் சென்றனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமி காப்பாற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மை தீண்டிய பாம்பை சிறுமி கோபத்தில் கடித்து துப்பியதாகவே கூறப்படுகிறது. இதில் பாம்பு இறந்துள்ளது. 

சிறுமி வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டுத் தோட்டத்தில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று அங்கு வந்ததுள்ளது. 

குழந்தையும் பாம்பிடம் ஒடிச் சென்று அதனை பிடிக்க முயன்ற போது, அது சிறுமியின் கீழ் உதட்டை அது கவ்வியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுமி, பாம்பை திருப்பி கடித்துள்ளார் என்றே தெரிய வந்துள்ளது. 

சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை, அருகாமையிலேயே பணியில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. 

துருக்கியில் மொத்தம் 45 வகையான பாம்புகள் காணப்படுகிறது. இதில் 12 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்