
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழிக்கேற்ப தன்னை கடிக்க முயன்ற சிறுத்தையை மூதாட்டி ஒருவர் கையில் இருந்த ஊன்று கோலால் அடித்து விரட்டிய சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மூதாட்டி ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது அருகே மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்கி கடிக்க முயன்றது.
அப்போது கீழே விழுந்த மூதாட்டி தனது ஊன்றுகோலை பயன்படுத்தி சிறுத்தையை இரண்டு முறை அடித்து விரட்ட முற்பட்டார்.
ஊன்றுகோலால் மூதாட்டி அடித்த போது சிறுத்தை அப்பகுதியை விட்டு வெளியேறியது.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.