
பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில்கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கஇன்றையதினம் சிட்னி நீதிமன்றில் ஆஜரான நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிணைவழங்க மறுத்துள்ளது.தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவுஸ்திரேலியபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.பிணை கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர், சிட்னிபொலிஸாரினால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுவிசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.