தனியார் மருத்துவ சேவைகள் முடங்கும் நிலை

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (9) தனியார் மருத்துவ சிகிச்சையில் ஈடுபடுவதை தவிர்க்க மருத்துவ நிபுணர்கள் சங்கம்  தீர்மானித்துள்ளது. 

எவ்வாறாயினும், விபத்துக்கள்,பிற அறுவை சிகிச்சை, மருத்துவ அவசரநிலைகள் மற்றும் தனியார் துறையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்கள் போன்ற சேவைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது..

அரசாங்கத்தை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக நாடளாவிய அமைதியான எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்திற்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவ நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அத்துடன்  தனியார் மருத்துவ சேவையை நாடும் பொதுமக்களுக்கு தமது நடவடிக்கைகளால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்