
கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு தனியார் துறையினருக்கும் நாளை அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இலங்கையையிலும் கோரத்தாண்டவமாடுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.