தனிமைப்படுத்தல் நடவடிக்கை இல்லாமல் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும்…!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இரண்;டு வாரங்கள் தனிமைப்படுத்தல் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் இடை இடையே அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இலங்கை சுற்றுலா துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க, ரத்மலானை மற்றும் மத்தள விமான நிலையங்கள் மூலம் இலங்கை வருவதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிய வருகின்றது.

சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையங்களில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும் இதற்கான கட்டணம் அறிவிடப்படமாட்டர்து எனவும் சுற்றுலா துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

முகநூலில் நாம்