தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சிறுவர்
இல்லத்திற்கு கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினால் உலர் உணவுப்
பொருட்கள், பால்மா, சுகாதார பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன

கிளிநொச்சி மலையாள புரத்தில் இயங்கும் சிறுவர் இல்லத்தின் இயக்குநரின்
கோரிக்கைக்கு அமைவாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சிறுவர்கள்
மற்றும், உத்தியோகத்தர்களது தேவை கருதி உலர் உணவுப் பொருட்கள், பால்மா
வகைகள் மற்றும், சுகாதார பொருட்கள் என்பன சுகாதாரப் பிரிவினரின்
வழிகாட்டலுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வழங்கி
வைக்கப்பட்டன. அத்தோடு   குறித்த சிறுவர் இல்லத்தில் பணிபுரிபவர்களின்
தனிமைப்படுத்தப்பட்ட மலையாளபுரம்,பாரதிபுரம், பரந்தன் பகுதிகளைச்சேர்ந்த
குடும்பங்களுக்கும்  உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்டாவளை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி
Dr.கஜேந்திராவ்,பொது சுகாதார பரிசோதகர் திரு.பிரதீபன் ஆகியோர்
வழிகாட்டலில் விசுவமடு, தேராவில், கல்மடு ,கட்டைக்காடு ,மற்றும்
தருமபுரம் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள்
சிலவற்றுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்