தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொடர்மாடிக் குடியிருப்புகள் சில விடுவிப்பு

உடன் அமுலாகும் வகையில், கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொடர்மாடிக் குடியிருப்புகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும், விடுவிக்கப்படும் தொடர்மாடிக் குடியிருப்புகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அதற்கமைய, கொழுப்பு -15, முகத்துவாரம் – மெத்சத் செவன, மிஹிஜய செவன, மோதர உயன, மட்டக்குளி -ரந்திய உயன, கிராண்ட்பாஸ் சமகிபுர,தெமட்டகொடை மிஹிந்து செத்புர வீடமைப்புத் தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

சுமார் 06 வாரங்களுக்கு மேலாக இந்த தொடர்மாடிக் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், கொழும்பில் உள்ள 13 தொடர்மாடிக் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்