தனது புதிய சகாவுடனான வாழ்க்கை -மனம்திறந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

தனது புதிய சகாவுடனான வாழ்க்கை  -மனம்திறந்தார் அவுஸ்திரேலிய பிரதமர். பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தனது சகா ஜோடி ஹெய்டனுடான அதிகம் அறியப்படாத அந்தரங்க வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

தங்கள் உறவின் வெற்றிக்கு இருவரினதும் நட்பின் வலிமையே காரணம் என பிரதமர் ஸ்கை நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானதால் அன்டனி அல்பெனிஸ் அதிகளவிற்கு வீட்டிலிருந்து வெளியே செலவிடுகின்றார் – அரசாங்கள் அலுவல்களில் ஈடுபடுகின்றார்.

நாங்;கள் தவிர்க்க முடியாமல் பிரிந்திருப்பதால் எங்கள் உறவு இன்னமும் ஒப்பீட்டளவில் புதிதாக காணப்படுகின்றது எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் வழமையாக செலவிடுவது போன்று புதிய உறவில் எனது நேரத்தை செலவிட முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் நான் அதிக நேரத்தை நாடாளுமன்றத்திலோ அல்லது அலுவல்களிளோ செலவிடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் அவுஸ்திரேலியாவின் 31 வது பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அன்டனி அல்பெனிஸ் உங்கள் நேரத்தை செலவிடுவதற்கான சகாஇருப்பது வாழ்க்கையில் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ளார்.

இந்த வருட தேர்தலிற்கு முன்பாக இருவரினதும் இரண்டுவருட வாழ்க்கை மக்களின் கவனத்தை ஈர்த்தது சஞ்சிகையொன்றின் முதற்பக்கத்தில் இருவரினதும் புகைப்படம் வெளியாகி தேசத்தின்கவனத்தை ஈர்த்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்பெனிசுடன் காணப்பட்ட ஹெய்டன் தேர்தல் வெற்றியை அல்பெனிஸ் அறிவித்தவேளை அவருடன் காணப்பட்டார்.

இந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய சஞ்சிகைக்கு கருத்து தெரிவிக்கையில் தனது முன்னாள் மனைவி 30 வருட கால திருமண வாழ்க்கைக்கு பின்னர் 2019 இல் உறவை முறித்துக்கொண்டதால் தான் மனமுடைந்ததாக தெரிவித்திருந்தார்

இந்த சம்பவத்தினால் தான் உணர்வுரீதியில் காயமடைந்ததாக அவ்வேளை தெரிவித்திருந்த அல்பெனிஸ் 2020 இல் மெல்பேர்னில் இடம்பெற்ற நிகழ்வில் ஹெய்டனை சந்தித்த பின்னர் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்