தனது அன்பு மகள் செய்த செயலை மகிழ்ச்சியுடன் பதிவிட்ட குமார் சங்கக்கார! குவியும் பாராட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது மகள் புகைப்படத்தை வெளியிட்டு எழுதியுள்ள பதிவு வைரலாகியுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

சங்ககாராவின் மனைவியின் பெயர் Yehali ஆகும். இந்த தம்பதிக்கு Kavith என்ற மகனும், Swyree என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது மகள் Swyreeயின் சமீபத்திய புகைப்படத்தை சங்கக்கார வெளியிட்டுள்ளார். அதில் Swyree மரத்தின் கிளையில் அமர்ந்தபடி புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார்.

அப்பதிவில், Swyree தனது தாத்தா, பாட்டி வீட்டில் தனக்கு பிடித்த நாற்காலியில் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் இயற்கையான இடத்தில் உட்கார்ந்து நேரத்தை செலவிடுவது சிறந்தது தான் என குறிப்பிட்டுள்ளனர். சங்ககாராவின் இந்த பதிவானது 2000 லைக்குகளை நெருங்கி வைரலாகியுள்ளது.

முகநூலில் நாம்