தடுப்பூசி ஏற்றியவர்களிடையே உள்ள அனுகூலம்: அமெரிக்கா புதிய கண்டு பிடிப்பு

தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

A girl gets a Pfizer BioNTech COVID-19 vaccine in Bucharest, Romania, Wednesday, June 2, 2021. Romania has started the vaccination campaign for children between the ages of 12 and 15. (AP Photo/Andreea Alexandru)

கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக கொவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக கொவிட் 19 தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. கோடை காலப்பகுதியில் அமெரிக்காவில் டெல்டா பரவலாக இருந்ததால்இ ஆரம்ப நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது சற்று வீழ்ச்சியடைந்ததென்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் தடுப்பூசி ஏற்றலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு என்பன சரிவையும் காட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பல ஆய்வுகள் தடுப்பூசி ஏற்றலினால் செயல்திறன் அதிகரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்