
தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம் என குயின்லாந்தின் பயோலா சென்றடைந்த பின்னர் பிரியா நடேசலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்,எனது பிள்ளைகள் உடல்உளரீதீயாக பாதிக்கப்பட்டனர்,எனது இளையமகள் தனது பல்லை இழந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிகவும் அவலம் நிறைந்த வாழ்வை வாழ்ந்தோம் எவருக்கும் அந்த நிலையேற்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆட்சி மாற்றம் நாங்கள் இங்கு வரும் நிலையை ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். னது குடும்பத்திற்கு அரசாங்கம் விரைவில் நிரந்தர விசாவை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.