தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்பிரகாரம் பதிலளிக்க மறுக்கும் பொலிஸார்

பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காலாவதியான
கண்ணீர்புகைக் குண்டுகள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வழங்க வேண்டுமென
தெரிவித்து ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தகவலறியும் ஆணைக்குழுவில்
மேன்முறையீடு செய்துள்ளார்.

இது தொடர்பான RTI விண்ணப்பத்துக்கு பொலிஸார் பதிலளிக்க மறுத்ததைத்
தொடர்ந்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தகவல்களை வழங்குவதாக பொலிஸ்மா அதிபருக்காக ஆணைக்குழுவில்
முன்னிலையான அதிகாரி உறுதியளித்திருந்தபோதிலும், தேசியப் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் எனக்கூறி தகவல்களை வழங்குவதற்கு பொலிஸார் மறுத்துள்ளனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் காணப்படுவதால்,
சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றே இந்தத் தகவல்களை வழங்க முடியும் என
தகவலறியும் ஆணைக்குழுவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதற்குக் கடும் எதிர்ப்பை தெரிவித்த ஆணைக்குழு, தகவலறியும்
உரிமைச் சட்டத்துக்கு அமைய தகவல்களை வழங்க சட்டமா அதிபரிடம் ஆலோசனைப் பெற
வேண்டியதில்லை. பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு சட்டம் தெரியாதா?
எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊடகவியலாளர் தரிந்துவின் தகவலறியும் உரிமைச் சட்டத்துக்குக் கீழான
விண்ணப்பத்துக்குப் பொலிஸார் பதிலளிக்கும் விதம் தொடர்பில் ஆணைக்குழுவில்
அதிருப்தியை வெளியிட்டுள்ள தரிந்து, பொலிஸார் தகவல்களை மறைத்தும்,
போலியான தகவல்களை வழங்கியும் ஆணைக்குழுவை தவறாக வழிநடத்துவதாகக் கூறி
பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்
வலியுறுத்தியுள்ளார்.

காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான
இறுதி தீர்ப்பை தகவலறியும் ஆணைக்குழு இம்மாதம் 27ஆம் திகதி வழங்குவதாக
அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்