ட்ரம்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்துச் செய்ய முடிவெடுத்துள்ளார் 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்துச் செய்ய முடிவெடுத்துள்ளதாக முன்னாள் உதவியாளர்களுள் ஒருவரான ஸ்டீபனி வோல்கோஃப் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்புக்கும் – மெலனியாவுக்கும் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு ட்ரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா ட்ரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என அவர் கூறியதாக பரவலாக பேசப்படுகிறது.

இதேவேளை மற்றொரு உதவியாளரான ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறுகையில், 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிந்துவிட்டது, அவர் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா ட்ரம்ப் விவகாரத்துச் செய்து விடுவார். இதற்காகவே மெலனியா காத்திருக்கிறார்” என்றார்.

ட்ரம்ப் பதவியில் இருக்கும் போது மெலனியா விவகாரத்துச் செய்ய முயற்சித்தால், ட்ரம்ப்புக்கு பெரும் அவமானமாக அமையும். அதோடு மெலனியாவை தண்டிக்க ட்ரம்ப் வழியை கண்டுபிடிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் ட்ரம்ப் – மெலனியா இடையே மனக்கசப்பு இருந்ததாக முன்பே தகவல்கள் வந்தாலும் இதுவரை அவர்கள் இந்த தகவலை மறுத்தே வந்துள்ளனர். எனவே, இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்