ட்ரம்பிற்கு பேரிடியாக வந்த செய்தி! அமெரிக்காவையே உலுக்கிய கருத்து கணிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாத இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் ட்ரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் சிஎன்என் செய்தி நிறுவனம் மற்றும் எஸ்எஸ்ஆர்எஸ் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர். இந்த செய்தி ட்ரம்ப்பிற்கு பேரிடியாக மாறியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற 43 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

2019ல் இருந்து ட்ரம்பிற்கு எதிராக வந்த கருத்து கணிப்புகளில் இதுதான் மிகவும் மோசமான கருத்து கணிப்பு ஆகும்.

கடந்த சில மாதங்களில் ட்ரம்ப் மொத்தமாக 7% இழந்து இருக்கிறார். இந்த நிலையில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு 57% பேர் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.

அங்கு பிடனுக்கு மொத்தம் 14% பேர் தற்போது கூடுதலாக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் ட்ரம்ப் தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்.

அவர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்கிறார்கள். அதேபோல் அங்கு கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு குறித்து ட்ரம்ப் எதுவும் பேசவில்லை.

அவர் போராட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார். மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடும் திட்டம் போட்டார். வெள்ளை மாளிகையில் ஒளிந்து கொண்டார் என்று நிறைய புகார்கள் உள்ளது. இதுதான் அவருக்கான ஆதரவு குறைய காரணம் என்கிறார்கள்.

ட்ரம்ப்பிற்கு எதிராக அவரின் கட்சி மூத்த அரசியல்வாதி கோலின் போவெல் போன்ற நபர்கள் கூட ட்ரம்பை எதிர்த்து வருகிறார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகநூலில் நாம்