டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக நான்காவது நாள் போராட்தில்

மரிகோபா கவுண்டி தேர்தல்திணைக்களத்திற்கு வெளியே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக நான்காவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலைத் திருடிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே அரிசோனாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குகளை எண்ணுங்கள், வாக்கு எண்ணிக்கை பாதியில் கைவிடப்படுவதாகவும், இந்த தேர்தல் நியாயமற்றது என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ள நிலையிலும் தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்