டெஸ்ட் போட்டியில் விளையாடுவதே கனவு: நேபாளம் வீரர் சந்தீப் லாமிச்சேன் கூறுகிறார்

முதன்முறையாக நேபாளத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சந்தீப் லாமிச்சேன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதே கனவு என்று தெரிவித்துள்ளார்.

நேபாள கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேன். நேபாள அணி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையாத நிலையில், சந்தீப் லாமிச்சேன் ஐபிஎல் உள்பட முக்கியமான டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.

நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமன், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை லீக்- 2 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் ஓபனிடம் நேபாளம் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் விளையாடிய சந்தீப் லாமிச்சேன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதுதான் கனவு எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்தீப் லாமிச்சேன் கூறுகையில் ‘‘நேபாளம் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனவு கனவு. என்னுடைய ஒவ்வொரு சிறிய பங்களிப்பும் நேபாளம் அணிக்கு செல்வதாக இருக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் கடைசி நாள் வரை, நேபாளம் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புவேன்’’ என்றார்.

முகநூலில் நாம்