டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் – கங்குலியை முந்தினார் விராட் கோலி

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை முந்தினார் விராட் கோலி.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. 
போட்டியின் மூன்றாம் நாளான இன்று விராட் கோலி 11 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை முந்தினார். அவர் 7,223 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடனும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடனும், விவிவி எஸ்.லட்சுமண் 8,781 ரன்களுடனும், சேவாக் 8,503 ரன்களுடனும் உள்ளனர். விராட் கோலியை தொடர்ந்து சவுரவ் கங்குலி 7,212 ரன்களுடன் உள்ளார்.

முகநூலில் நாம்