டென்னிஸ் கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், கிரேக்கத்தின் ஸ்டபீனோஸ் ஸிட்சிபாசுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது. டை பிரேக் வரை நகர்ந்த முதல் செட்டில், 7-6 என ஸிட்சிபாஸ், செட்டைக் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த கிரிகோர் டிமிட்ரோவ், 6-4 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய கிரிகோர் டிமிட்ரோவ், செட்டை 6-3 என கைப்பற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், கிரிகோர் டிமிட்ரோவ், பிரித்தானியாவின் டேன் எவாண்சை எதிர்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்