டெனால்ட் ட்ரம்ப்   அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்  

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் திங்களன்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அண்மைய காலங்களில் எஸ்பருடன் பலவிதமான முரண்பாடுகளை கொண்டுள்ள டிரம்ப், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் பாதுகாப்புச் செயலாளராக நியமிப்பார் என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் எந்தவொரு புதிய வேட்பாளரையும் செனட் உறுதிப்படுத்த வாய்ப்பில்லை.

எனினும் இந்த அறிவிப்பு குறித்து பென்டகன் எதுவித கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

எஸ்பரின் முன்னோடி ஜிம் மாட்டிஸ் ட்ர்ம்ப் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்ததுடன், கொள்கை வேறுபாடுகள் காரணமாக 2018 இல் பதவி விலகினார்.

ஆதாரங்கள் இல்லாமல் தேர்தல் மோசடி இடம்பெற்றதாக குற்றம்சாட்டி வரும் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடனுடனான தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார்.

எவ்வாறெனினும் ஜனாதிபதி பதவியை துறக்கும் முன்பாக, பல அதிரடி நடவடிக்கைகளை டரம்ப் அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் பல முக்கிய முடிவுகளில் அவர் கையெழுத்திடவும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்