டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணம்

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்