டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் ஆட தசுன், பானுக, சமீர ஒப்பந்தம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள சர்வதேச லீக் டி20 தொடரின், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக இலங்கை அணி வீரர்களான தசுன் ஷானக, பானுக ராஜப்ஷ மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடரில் விளையாடும் அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்களை அறிவித்து வருகின்றன. இந்தநிலையில் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி 6 வெளிநாட்டு வீரர்களின் பெயர்களை இதுவரை வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவர் தசுன் ஷானக மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, அதரடி துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஜப்ஷ ஆகியோர் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று இலங்கை வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ரோவ்மன் பவல், பெபியன் எலன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரையும் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 14 வெளிநாட்டு வீரர்களை தமது அணியில் இணைத்துக்கொள்ள முடியும். அதன்படி ஏற்கனவே கல்ப் ஜயண்ட்ஸ், எம்.ஐ எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்